ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

புவி மேற்ப்பரப்பு செயன்முறைகளும் வகைகளும்

அகவிசைகள் 

புவி மேற்பரப்பானது காலத்துக்கு காலம் பல்வேறு தரைத்தோற்ற மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துள்ளது.இத் தரைத்தோற்ற மாற்றத்திற்கு இரு பிரதான விசை செயற்பாடுகளான அகவிசை ,புறவிசை  காரணிகள் காரணமாக அமைகின்றன. அகவிசைகள் என்பது புவியோட்டினுள் தொழிற்படும் கிளர்மின் வீச்சின் விசை தாக்கமே ஆகும்.இவ் அகவிசைகளினால் புவியில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படும். 


அகவிசை  வகைகள்   

  • அமுக்க விசை
  • இழு விசை 
  • காந்த விசை 
  • பெருக்கு விசை
  •  மின்காந்த ஓட்டங்கள்
  •  புவி நடுக்க அலைகள் 
      அகவிசை  தொழிற்பாடுகளால் புவி மேற்பரப்பில் மற்றும்  உட் பரப்புகளில் பல்வகைப்பட்ட  நிலத்தோற்ற நிலஉருப்புகள்  உருவாக்கம்  பெறுகின்றன.       

        • கண்டநகர்வு கொள்கைகள் 
        • புவி தகட்டோட்டு கொள்கைகள் 
        • புவி நடுக்கம் 
        • எரிமலை தொழிற்பாடு 
        • மடிப்புகளும் குறைகளும் 

        கண்ட நகர்வு கொள்கை 

        பஞ்சியா கண்டம்

        கண்டநகர்வு கொள்கை என்பது "கார்போனிபரஸ் காலத்தில் ஒரே நிலத் திணிவாக  காணப்பட்ட பஞ்சியா கண்டம்,இயோசின்  காலத்தில் புவிக்கோளவகத்தினுள்  இடம்பெற்ற பெருக்கு  விசை காரணமாக பிளவுற்று பிளைதோசின்  காலத்தில் வெவ்வேறு திசை நோக்கி  நகர்ந்து நிலை பெற்றது" எனும் கோட்பாடு ஆகும்.1858ம் ஆண்டு ஸ்னைடர் என்பவர் கண்டங்களின் நகர்வு தொடர்பாக கோட்பாடு  ஒன்றை முன்வைத்தார். 1910ல் டெய்லர், 1912ல் அல்ப்ரட் உவெக்னர் என்பவர்களாலும்   கண்டநகர்வு கோட்பாட்டை முன்வைத்தனர். 

        கண்ட நகர்வு கொள்கையின் படி புவிக்கோளமானது "பஞ்சியா கண்டம் "  அழைக்கப்பட்டது.பஞ்சியா  கண்டத்தின் வட  அரை பகுதி அங்காராலாந்து (லோறேசியா) என்றும் தென் அரை பகுதி கொண்டுவானாலாந்து என்றும் அழைக்கப்பட்டது.இவ்விரு நிலத்தினிவையும்  தெர்தீஸ் கடல்  பிரித்தது.காந்த் நகர்வுக்கு முன்வைக்கப்பட்ட சான்றுகள் ,

        1. புவி பெளதிகவியல் சான்று

        2. புவி இடவிளக்கவியல் சான்று

        3. உயிர் சுவட்டியல்  சான்று 

        4. காலநிலையியல் சான்று 

        5. புவி சரிதவியல் சான்று 

            

        புவி பெளதிகவியல் சான்று=>இச் சான்றானது புவியோட்டின் அடர்த்தியை அடிப்படையாய் கொண்டு  முன்வைக்கபடுகிறது.இங்கு புவியோட்டின் அடர்த்தியானது (2.7-2.9கன  சதுர கிராம் )இடையோட்டில் ஒரு சமநிலையை பேணி மிதக்க செய்கிறது.இங்கு நீரில் பனிக்கட்டி மிதப்பது போன்று கண்டங்கள் நகர்கின்றன.    

        புவி இடவிளக்கவியல் சான்று =>இச் சான்று மூலம் மீண்டும் கண்டங்களை  பொறுத்த கூடிய வகையில் அவற்றின் இட விளிம்புகள் அமைந்துள்ளன.உதாரணமாக ஆபிரிக்காவின் கினி வளை குடா மெக்சிகோ வளை குடாவுடன் பொருந்தும்  என்றும் இந்திய வளை   குடாவினுள்  அவுஸ்திரேலியா பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.

        உயிர் சுவட்டியல்  சான்று =>தாவர  உயிர் சுவடுகளை  ஆய்வு  செய்த போது ஒரு சில தாவர உயிரினங்கள் ஒரு சில  மட்டுமே அவதானிக்க கூடியதாக உள்ளது.அதே போல பலவகையான தாவர  உயிரினங்களை பல இடங்களிலும் அவதானிக்கலாம்.இதன் மூலம் கண்டங்கள் ஒன்றாக இருந்து நகர்த்துள்ளமை உறுதிப்படுத்தப்படுகிறது.உதாரணமாக அவுஸ்திரேலியாவில் கங்காரு,வட சீனாவில் பண்டகள் ,மேற்கு ஆபிரிக்காவில் தீக்கோழிகள்,அந்தாடிக்காவில்  பென்குயின்கள் மேலும் உலகின் சகல பாகங்களிலும் யானைகள் .தென்னை மரங்கள் உள்ளமை .

        காலநிலையியல் சான்று=>காலநிலையை அடிப்படையாக கொண்டும் கண்டங்கள் நகர்வு உறுதிப்படுத்தப்படுகிறது.உதாரணமாக கண்டங்கள் ஒன்றாக இருந்தபோது காலநிலையும் ஒன்றாக காணப்பட்டதாகவும் கண்டங்கள் பிரிந்து சென்றபோதும் ஒரே மாதிரியான காலநிலை உலகில் பல பாகங்களிலும் நிலவுவதை கொண்டும் இதனை உறுதிப்படுத்தலாம்.உதரணமாக  அயன மழைக்காட்டு காலநிலை உலகில் பிரேசில் ,அமேசன் ,கொங்கோ,வட மடகஸ்கர் ,இலங்கை ,இந்தியாவின் கிழக்குக்கரை ,யாவா,சுமாத்திரா தீவு ,இந்தோனேசியா,பப்புவா நியுகினி என பல பாகங்களிலும் நிலவுதல் .மேலும் காலநிலை  ஏற்ப கனிப்பொருள் படிவுகள் இடம் பெற்றுள்ளமை.உதாரணமாக இடை வெப்ப வலயங்களில் இரும்பு,நிலக்கரி படிவுகளை காணலாம்.

        புவிசரிதவியல் சான்று =>இச் சான்றினை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது  பஞ்சியா ஒன்றாக காணப்பட்ட பொது அடையல்கள் ஒன்றாக இருந்தன என்றும் பஞ்சியா பிளவுற்று நகர்த்த பொது அடையல்கள் வெவ்வேறு திசை நோக்கி நகரத்து படிந்து மடிப்பு மலைகளாக உருப்பெற்றுள்ளன எனப்படுகின்றது. உதாரணமாக அமெரிக்கா மேற்காக நகர்ந்ததால் ராக்கி,அந்திஸ்  மலை தொடர்களும் ,அவுஸ்திரேலியா தெற்கு நோக்கி நகர்ந்ததால் பெரிய பிரிப்பு  மலையும் உருவானமை.

         

         

         

        கருத்துகள் இல்லை:

        கருத்துரையிடுக