செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

புவி தகட்டோட்டுக்  கொள்கை 

1958ம் ஆண்டு க்யூலர் புவியோட்டை தகடு என கூறினார்.1963ல் கீஸ், மெத்யூஸ் ஆகிய இருவரால் நவீன புவித்தகட்டோட்டு கோட்பாடு முன்வைக்கப்பட்டது.
இக் கவசத்தகடுகள்
அளவின்அடிப்படையில் இருவகைப்படும் .
  1.  பெரிய கவசத்தகடுகள்
  2.   சிறிய கவசத்தகடுகள்
 பெரிய கவசத்தகடுகள்
  • அமெரிக்க   புவிக்கவசதகடு 
  • ஆபிரிக்க புவிக்கவசதகடு
  • அத்தாட்டிக்க   புவிக்கவசதகடு 
  • ஐரோ,ஆசிய புவிக்கவசதகடு
  • பசுபிக் புவிக்கவசதகடு
  • இந்திய புவிக்கவசதகடு                                  
  • அவுஸ்திரேலிய புவிக்கவசதகடு
சிறிய கவசத்தகடுகள்
  • அரேபிய கவசத்தகடுகள்
  • ஈரானிய கவசத்தகடுகள்
  •  பிலிபைன்ஸ் கவசத்தகடுகள்
  • ஹவாய் கவசத்தகடுகள்
  • கோக்கஸ் கவசத்தகடுகள்
  • ஜோர்டான் கவசத்தகடுகள்
  • பீஜி கவசத்தகடுகள்
கவசத்தகட்டு  நகர்வு 3 வகைப்படும் .
  1. ஒருங்கும் கவசத்தகட்டு  நகர்வு
  2. விலகும் கவசத்தகட்டு  நகர்வு
  3. நிலைமாறும் கவசத்தகட்டு  நகர்வு
 
ஒருங்கும் கவசத்தகட்டு  நகர்வு
              இரு வேறு பட்ட கவசத்தகடுகள் அமுக்கவிசை காரணமாக நேர் திசையில் ஒருங்கும் போது மோதுதல் ,அடையல்கள் உருவாக்கம் பெறல், அவ் அடையல்கள் படிந்து மலைகள் உருவாதல் போன்ற தொழிட்பாடுகள் இடம்பெறும்.இவ் ஒருங்கும் செயற்பாடானது கண்டம்-கண்டம்,சமுத்திரம்-சமுத்திரம் ,கண்டம்-சமுத்திரம் என்ற அடிப்படையில் ஒருங்கலாம் இவ்வாறான தொழிற்பாடுகள் புவிக்கோளத்தில் இடம் பெற்றமையால் உலகில் ரொக்கி ,அந்தீஸ்,இமயம்,அல்ப்ஸ் ,அட்லஸ் ,போன்ற  இளம் மடிப்பு மலைகள் உருவாக்கம் பெற்றன.

               உதாரணமாக =>அமெரிக்க கவசத்தகடும்  ஐரோ ,ஆசிய கவசத்தகடும் நேர் நேர் திசையில் ஒருங்கியதால் ரொக்கி ,அந்தீஸ் போன்ற மலைகள் உருவாக்கம் பெற்றன .

விலகும் கவசத்தகட்டு  நகர்வு
புவி  கோளவகத்தில் ஓனராக காணப்பட்ட இரு வேறுபட்ட கவசத்தகடுகள் புவியினுள் இழுவிசை தொழிற்பாட்டால்  தன்னிலை விட்டு விலகி அமைவதால் இடைக்கோளம் (சமுத்திரங்கள் ) உருவாக்கம் , இவ்வாறு தகடுகள் விலகி அமையும் போது  அதிலுள்ள அடையல்கள் சமுத்திரங்களுள் படிந்து சமுத்திரங்களினுள் படிந்து சமுத்திர மத்திய மலை தொடர்களாக உருவாகும்.மேலும் சமுத்திரத்தினுள் படிந்த அடையல்கள் வெப்ப உந்துதலால் எரிமலை குழம்புகளாக உருப்பெற்று வெளித்தள்ளப்பட்டு  தீவுகளாகவும் உருப்பெறுகின்றன .
            உதாரணமாக =>அமெரிக்க கவசத்தகடும்  ஐரோ ,ஆசிய கவசத்தகடும் தன்னிலையில் விலகி அமைந்தமையால் அத்திலாந்திக் சமுத்திரம் ஆகவும் அதனுள் "s" வடிவமான மத்திய மலை தொடரும் சமுத்திரத்தினுள் படிந்த அடையல்கள் எரிமலை குழம்புகளாக வெளித்தள்ளப்பட்டமையால் ஐஸ்லாந்து தீவும் உருவாகியமையால் குறிப்பிடலாம் .

 நிலைமாறும் கவசத்தகட்டு  நகர்வு
            இரு  வேறுபட்ட தகடுகள் தன்னிலையில் முட்டி  எதிர் எதிர் திசையில் நிலை  மாறும் போது அடர்த்தி கொடிய தகடு கீழாகவும் அமிழ்கிறது.இங்கு தகடுகள்  முட்டி மோதும் போது  உருவாக்கம் பெறுகின்ற அடையல்கள் சமுத்திரங்களினுள் படிந்து எரிமலைகளாக கண்டா தகட்டின் பலவினமான பகுதியை தகர்த்துக் கொண்டு வெளிப்பாய்கின்றன.மேலும் தகடுகள் நிலைமாறும் போது உருவாக்கம் பெறுகின்ற இறக்கங்கள் சமுத்திர அகழிகளாக காட்சி தரும் .

              உதாரணமாக =>மரியானா அகழி (15455ம்-அகலம் ),பேரு சிலியன்
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக