வியாழன், 1 செப்டம்பர், 2016

க .பொ .த உயர் தரத்தில் "மொழி" எனும் பாடப் பிரிவில் கற்பிக்கப்படும் ஜப்பானிய மொழி பற்றிய அறிமுகம்

Japanese

கிழக்கு ஆசிய மொழிகளில் ஒன்றான இம் மொழி 125 ற்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படும் மொழியாகும் .இம் மொழியை Nihongo என்று ஜப்பானியர் அழைப்பர் .இம் மொழி ஜப்பான் நாட்டின் தேசிய மொழியாக உள்ளது.இம் மொழி Japonicஎனும் மொழிக்கு குடும்பத்தில் இருந்து வந்ததாகும் .ஆங்கிலம்,தமிழ் போல இம் மொழியிலும் அகராதி உள்ளது.இதில் 99 ஒலி (sounds) ,5 உயிர் எழுத்துக்களும்(vowels) ,14 மெய் எழுத்துக்களும்(consonants) உள்ளன .
                உயிர்   எழுத்துக்கள்:-a,e,i,o,u 
                மெய் எழுத்துக்கள் :-k,s,t,h,m,y,r,w,g,z,d,b,p,n

இம் மொழியில் உள்ள சிறப்பம்சம் யாதெனில் இம் மொழி மூன்று விதமாக எழுதப்படும் .
  1. hiragana 
  2. katakana 
  3. kanji 

Hiragana 

ஆங்கில அகராதியை போல hiraganaவில் வரும் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு தனித்துவமான ஒலியை பிரதிநிதித்துவப்படுத்தும் .ஆங்கிலத்தில் ஒரு எழுத்து பல விதமாக உச்சரிக்கப்படும் .
                                                  உதாரணமாக "e" எனும் எழுத்து  red, redo,poorer என பல விதமாக உச்சரிப்பர் .ஆனால் hiraganaவில் ஒரு எழுத்தை ஒரு முறையில் மட்டுமே உச்சரிப்பர். உதாரணமாக இதில்  "A" இற்கு பயன்பாடு எழுத்து வேறு எந்த சொல் உச்சரிக்கவும் பயன்படுத்தப்பட மாட்டாது.

Katakana 


hiragana ஒலிகளை உச்சரிப்பதற்காக பயன்படும் இன்னும் ஒரு முறை அல்லது வழியே katakana எனப்படும். பொதுவாக இது ஜப்பான் தாண்டிய வேறு நாடுகளில் பயன்படும் சொற்களை எழுதப் பயன்படும் .

 

Kanji 

சீனாவில் இருந்து ஜப்பானுக்கு கொண்டுவரப்பட்ட மொழியே இம் மொழியாகும்.இம் மொழி hiragana ,katakana  விட  வித்தியாசமானதாகும். ஏனெனில் kanjiயில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது.

 

 

 ஜப்பானிய மொழியில் உள்ள அடிப்படை விடயங்கள் முடிந்தது .அடுத்த பதிவில் மேலும் விரிவாக பார்ப்போம் .

 

 

 

 

 

 

 



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக