கருங்கடல்
அமைந்திருப்பதன் மூலமும் இதன் வரலாற்று முக்கியம் அதிகரிக்கின்றது . அதாவது இது ஐரோப்பா கண்டத்தையும் சின்னாசியாவையும் பிரிக்கும் கடலாகும் . ஹோஸ்பரஸ் நீரினை ,மர்மரா கடல்,டாடனேஸ் நீர்சந்தி என்பன இக் கடலை மத்திய தரைக்கடலுடன் இணைத்துள்ளது .குளிர்காலத்தில் ஏற்படும் மூடுபனி இக் கடலை கருமை நிறமாக்குவதால் இது "கருங்கடல்" எனப்படும்.இதன் நீளம் 15மைல் ,அக்காலம் 380 மைல் .இக் கடலின் வேண்டிய அளவு உப்புத்தன்மை காணப்படாததால் இதில் 360 அடி ஆழத்துக்கு கீழ் உயிரினங்களோ ,தாவரங்களோ காணப்படுவதில்லை .
மத்தியதரைக் கடலுடன் இது தொடுக்கப்பட்ட போதும் இந் நீரில் மத்தியதரைக் கடலை விட உப்புச்சுவை குறைவாகவே காணப்படும் . இக் கடலில் தீவுகள் குறைவாக காணப்படும் .அசோவ் கடல் இக் கடலின் ஒரு பகுதியாக உள்ளது .கேர்ச் நீர்ச்சந்தியின் மூலம் இது கருங்கடலுடன் இணைக்கப்படுகிறது.
இக் கடலை அடுத்துள்ள "கிரைமிய தீபகற்பம்" இக் கடலில் வரலாற்று சிறப்பு மிக்க குடாநாடாகும் .விவசாயம்,கப்பல் கட்டல் ,சுரங்க வேலை , மீன்பிடி என்பவற்றுக்கு மிக ஏற்றது.இது முன்னர் சோவியத் யூனியனை சேர்த்த குடியரசாக இருந்தது . 1945 முதல் சோவியத் கூட்டாட்சி குடியரசின் பகுதியாக இருந்து வந்துள்ளது .சிப்பராம்பல்,செஹாஸ் டோப்போல் , யால்ட்டா,கொர்ச் என்பன கருங்கடலை அடுத்துள்ள முக்கிய நகரங்களாகும். இவற்றுள் யால்ட்டா நகரம் 2ம் உலக யுத்தத்தினால் அங்கு கூடிய மகாநாடு குறித்தும் முக்கிய இடம் பெறுகிறது.இக் கிருமிய குடாநாடு தொடர்பாக ஏற்பட்ட யுத்தமே "கிருமிய யுத்தம் " ரஷ்ய சக்கரவர்த்தி 1ம் நிக்க லஸ் கொன்ஸ்தாந்து நோபிளை கைப்பற்றி துருக்கியை ஆள வேண்டும் என்று எண்ணி செயற்பவே துருக்கியருக்கு ஆதரவாக போரில் குதித்தனர் .1854-1856ல் நடந்த இப் போரும் கருங்கடல் வரலாற்று முக்கியம் பெறுகிறது.
1ம் உலக யுத்தத்தின் போது ரஷ்யாவுக்கும், துருக்கியருக்கும் இடம் பெற்ற பல போர்கள் இக் கடலில் இடம் பெற்றது .அவ் யுத்தத்திற்கு பிறகு இது
சர்வதேச ஆட்சிக்கு கீழ் வந்தது .1936ல் "மான்ட் க்ஸ் கன்வென்சர்" இதை துருக்கிக்கு கையளித்தது.2ம் உலக யுத்தத்தில் பல்வேறு யுத்தம் நடை பெற்றது. நைசியா என்ற சின்னாசியாவின் பேரரசு தன் புற எல்லை கடலாக மாற்றி கொண்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக