வியாழன், 15 செப்டம்பர், 2016

 கலா ஓயா 

         
          இலங்கை நதிகளில் மிக முக்கிய இடம்பெறும் நதியாக கலா ஓயா உள்ளது.கோணநதி,வான் பரப்பி ஆறு என்பன அதன் வேறு பெயர்கள் ஆகும். ஆதி ஆரியர் குடியிருப்பு ஏற்பட்ட வகையிலும் இது முக்கியத்துவம்
பெறுகிறது .மாத்தளை குன்றுகளில் உற்பத்தியாகும் இந்நதி தென் மேற்கு,வட கிழக்கு பருவக்காற்று மூலம் நீரை பெற்று வற்றாத ஜீவநதியாக 148 km தூரம் ஓடி இலங்கையின் வட மேற்கு கடலில் தற்போதைய புத்தளம் மாவட்டத்தில் கடலுடன் கலக்கிறது .

             
மிக பண்டைய காலத்தில் இருந்து இந்நதி உலர்வலய நீர்ப்பாசன  நடவடிக்கைகளுக்கு அதிகம் பயன்பட்டது . இது கலா ஓயா பள்ளத்தாக்கையும் ,மல்வத்து ஓயா பள்ளத்தாக்கையும் அடுத்துள்ள பிரதேசங்களில் நீர் பாய்ச்சப்பட்டது . அதன் மேற்கு புறத்தில் தாதுசேனன் 3 1/2 மைல் நீளமான ஓர் அணையை கட்டி நீரை கலா ஓயா எனும் பெயரில் பெரும் குளம் ஒன்றை கட்டினான் .அனுராதபுரத்திற்கு வேண்டிய பெருமளவு நீரை தாதுசேனனுக்கு பிற்பட்ட காலத்தில் வழங்கிய பெருமைக்குரிய நதியாக இது சிறப்பு பெறுகிறது .

               இந்தியாவின் ஆதிக்கநல்லூர் நாகரிக வரலாற்றை ஒத்ததாக இலங்கையில்  பொம்பரிப்பு ஆய்வு மையமும் கலா ஓயா கரையை அண்டி காணப்படுவது இவ் நதியின் வரலாற்று புகழை மேலும் அதிகரிக்கின்றது . மேலும்  புகழ்பெற்ற
அவுக்கன புத்த படிமமும் இந்த நதியை அண்டியே நிறுவப்பட்டுள்ளது .

           
கலா வாவி ,பலலு வாவி ,சோலை வாவி ,கந்தளாய் வாவி  உள்ளிட்ட பெரும் குளங்களும்  ஏராளமான சிறு குளங்களும்  இந்த நதியை ஆதாரமாக  கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது .இந்த நதியை ஆதாரமாக கொண்டு இராஜாங்கனை நீர் தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.ஆரம்ப கால ஆரிய குடியேற்றங்களில் உருவாகிய உருவெல கம இந்தியை ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்டதாக மகாவம்சம் கூறுகிறது .எவ்வாறு எனினும் தாதுசேனன் காலத்திற்கு  பிறகே இந்நதியின் புகழில் எழுச்சி ஏற்பட்டது .அனுராதபுரத்தை அந்நியர் ஆக்கிரமித்த போது தாதுசேனனும் ஒரு புத்த துறவியும் பாதுகாப்பு தேடி கலா ஓயாவின் தென் பகுதிக்கு செல்ல முற்பட்டதாகவும் இவர்கள் சென்ற போது கலாஓயாக்கரை புரண்டோடியதாகவும் இதை கண்ணுற்ற துறவி எமது பயணத்தை தடை செய்த குளத்தின் பிரபாகத்தை நீர் ஒரு குளம் கட்டி தடுக்க வேண்டும் என்று கேட்டதாகவும் பிற்பாடு அரசனாக வந்ததும் தாதுசேனன் அதை மனதில் கொண்டு கலா ஓயாவை ஆதாரமாக வைத்து கலாவாவியை அமைத்தான் என்று கூறப்படுகிறது .

              இந் நதியை மிக சிறப்பாக பயன்படுத்தி நீர்ப்பாசனம் செய்த தாதுசேனன் அவன் புதல்வன் கசியப்பனால் சிறைபிடிக்கப்பட்ட போது அவன் செல்வத்திரட்டை கேற்க கலாவாவி நீரை தன் செல்வம் என்று தாதுசேனன் கூறினான் .இவன் முயற்சி காரணமாக விருத்தி செய்யப்பட்ட கலாவாவி அனுராதபுரத்தின் விவசாய நடவடிக்கைகளுக்கு பெரும் பங்கு வழங்குவதுடன் குடிநீர்,நன்னிர் என்பவற்றிற்கும் உதவுவது குறிப்பிடத்தக்கது . 

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக