கணனி
பெற்றுக் கொள்ளும் ஒரு இலத்திரனியல் சாதனம் கணனி ஆகும் .இக் கணனி துல்லியமானதாகவும் ,வேகமானதாகவும் ,பல்திறன் ஆற்றல் கொண்டதாகவும் ,நம்பகத்தன்மையானதாகவும் ,உணர்ச்சியற்றதாகவும்,சேமிக்கும் தன்மை உடையதாகவும் ,ஞாபக சக்தி கூடியதாகவும் ,கலைப்படையாததாகவும் காணப்படும் .
கணனி முறைமையின் பாகங்கள்
- வன் பொருள் (Hardware)
- மென்பொருள் (Software)
- நிலைப்பொருள் (Firmware)
- உயிர்பொருள் (Liveware)
கணனி வன்பொருட்கள்
கணனி முறைமையொன்றின் தொட்டுணரக்கூடிய பாகங்கள் வன்பொருட்கள் எனப்படும் .இவை கணனி பெளதீக உபகரணங்கள் ஆகும் .
கணனி வன்பொருட்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்
- உள்ளீட்டு சாதனம் (Input device)
- வெளியீட்டு சாதனம்(output device)
- முறைவழியாக்க சாதனம்(processing device)
- சேமிப்பு சாதனம்(storage device)
- தொடர்பாடல்சாதனம்(communication device)
உள்ளீட்டு சாதனம் (Input device)
கணனி ஒன்றிற்கு தரவுகளை அல்லது கட்டளைகளை உள்ளீடாக வழங்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் இவையாகும்.இவ் உள்ளீட்டு சாதனங்கள் பல வகைப்படும்.
- சுட்டும் சாதனம்(Pointing device )
- விசைப்பலகை (Keyboard)
- வருடி (Scanner)
- நுணுக்குப்பன்னி(Micro phone)
- உணரி (Sensors)
- இலக்கமுறை ஒளிபடக்கருவி (Digital camera)
- வலை ஒளிபடக்கருவி(Web camera)
- பட்டைக்குறிமுறை வாசிப்பான் (Bar code reader)
- ஒளிப்பேனா (Light pen)
- இயக்கப்பிடி (Joystick)
- தடப்பந்து (Track ball)
- கைரேகை பதியி (Finger print reader)
- காந்த மை எழுத்துரு வாசிப்பான் (MICR)
- ஒளியியல் குறி வாசிப்பான் (OMR)
- ஒளியியல் எழுத்துரு வாசிப்பான் (OCR)
- மின்னணு விற்பனைப் புள்ளி (POS Terminal )
- வரைபியல் இலக்கமாக்கி (Graphics Tablets)
சுட்டும் சாதனம்(Pointing device)
இவை கணனியிலே cursor இணை அசைப்பதற்கு பயன்படும் இதன் மூலம் கணனியின் திரையிலே தேவைப்பட்ட இடங்களுக்கு cursor இணை கொண்டு சென்று கட்டளை தரவை உள்ளீடு செய்யலாம் .
பின்வருவன சுட்டும் சாதனங்களாக கருதப்படுகின்றன .
பின்வருவன சுட்டும் சாதனங்களாக கருதப்படுகின்றன .
- Mouse(சுட்டி)
- Touch panel/pad(தொடுதிரை)
- Track ball, Digitizer or graphics tablets
- Touch Sensitive Screen(தொடுகை உணர் திரை)
- Joy stick
- pointing stick
- Light pen
- கணனிக்கு கட்டளையொன்றை அனுப்புதல் .(உதாரணம்:-open,minimize)
- திரையிலே எழுத்துக்களை அல்லது objectகளை தெரிவு செய்தல். (உதாரணம்:-file ,graphics, video)
- கணனியில் graphicsகளை வரைதல் .
சுட்டி
பொதுவாக கணினியில் பயன்படுத்தும் சுட்டு சாதனம் இதனை பயன்படுத்தி GUI (Graphical User Interface) இல் கட்டளைகளை கணனிக்கு வழங்க முடியும் .Mouse எனும் பெயர் Standard Research Institute இனால் வழங்கப்பட்டது .
சுட்டிகள் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம்
USB Mouse |
இயந்திரவியல் சுட்டி (Mechanical Mouse) ==> இது ball mouse எனவும் அழைக்கப்படும். Mouse இன் அடியிலுள்ள சிறிய பந்தின் அசைவிற்கேற்ப சுட்டான் (cursor) அசைந்து கட்டளைகளை உள்ளீடு செய்யப்படும் .
PS/2 Mouse |
ஒளியியல் சுட்டி(Optical Mouse) ==> இங்கு பந்திற்கு(ball) பதிலாக ஒளிகாலும் இருவாயிகள் பயன்படுத்தப்படும் .ஒளியானது மேற்பரப்பில் ஏற்படுத்தப்படும்.அசைவைக் கொண்டு இது தொழிற்படும்.
Wireless Mouse |
வடமற்ற சுட்டி (Wireless Mouse)==>இது Radio frequency தொழில்நுட்பம் மூலம் கணணியுடன் தகவல்களை பரிமாறுகின்றது .இங்கு மின்நுகர்வு குறைவாகக் காணப்படும்.இதன்மூலம் அண்ணளவாக 10m தொலைவிலிருந்து கணனியில் இயக்க கூடியதாக இருக்கும்.
Trackball
Touch Panel /Pad
-தொடர்ச்சி அடுத்தப் பதிவில் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக