சனி, 3 செப்டம்பர், 2016

தரவு ,தகவல்

தரவு

       தரவு என்பது கணினிக்கு உள்ளீடுகளாக வழங்கப்படும் அர்த்தமற்ற ஒழுங்கற்ற  செய்முறைக்கு உட்படுத்தப்படாத விடயங்கள் ஆகும் .இத் தரவுகளை வேறு வேறாக பிரித்தெடுத்து கருத்து வழங்க முடியாது .


உதாரணமாக ,
  • 75
  • உங்களின் வயது 
  • கணித பாடத்தில் ஒரு மாணவன் பெற்ற புள்ளி  
       பச்சை தரவு என்பது ஒரு தடவைகூட செய்முறைக்கு உட்படுத்தப்படாத விடயம் ஆகும். இது யாதாயினும் பொருள் பற்றிய அடிப்படை ஆகும் .

தரவுகளின் பல்லூடக வடிவங்கள் 

  1. எழுத்து வடிவில் => இலக்கங்கள்,எழுத்துகள் ,குறியீடுகள்,விசேட குறியீடுகள்
  2. கட்புல வடிவில்=>படங்கள் ,காணொளிகள் 
  3. செவிப்புல வடிவில்=>பாடல்கள் , ஏனைய ஒலிகள் 

தரவுகளின் வகைகள் 

தரவுகளை பண்பு ,அளவு  அடிப்படையில் வகைப்படுத்தலாம்.
  1.  பண்பு அடிப்படையில்  =>இவை எண்சார் ரீதியில் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியவை ,  இவை எண்கணித செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் .
  2.  அளவு அடிப்படையில் => இவை ஏதாவது பண்பு  அடிப்படையில் வகைகுறிக்கப்படும்,இவை எண்ணிக்கை அடிப்படையில் காட்ட முடியாது. 

தரவுகளின் இயல்புகள்

  1. செம்மையானது
  2. பொருளியல் ரீதியானது 
  3. நம்பகமானது -தரவு  நம்மகமான மூலம்  இருந்து எடுக்கப்பட்டிருத்தல்.தரவு சேகரிக்கும் பொது ஏற்படும் வள விரயம் தரவு பயன்படுத்து அளவிற்குபெறுமதி வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
  4. எளிமையானது-தரவு எளிமையான முறையில் வழங்கப்பட வேண்டும் .
  5. சரிபார்த்தரியக்கூடியது -தரவு ஒன்றின் செம்மை தண்மை நிரூபிக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
  6. நிறைவான தன்மை -தகவல் ஒன்றை உருவாக்க தேவையான அணைத்து தரவையும் கொண்டிருக்கும்.
  7. நெகிழ்ச்சி தன்மையானது- குறிப்பிட்ட தேர்வானது ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களிலும்  பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.
  8. பொருத்தப்பாடானது-தரவு ஒன்று எந்த தேவைக்காக சேகரிக்கின்றோமோ அது தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
  9. குறிப்பிட்ட  தேவையை நிறைவு செய்ய குறிப்பிட்ட நேரத்துக்குள்  கிடைக்க கூடியததாக இருத்தல் வேண்டும் . 
  10. தரவு இலகுவில் பெறக்கூடுயதாக  அமைத்தல் வேண்டும் . 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக