ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

components of computer

வெளியீட்டு உபகரணங்கள்.

                      
      கணனி வன்பொருட்களில்  இவ் வெளியீட்டு சாதனங்களும்  ஒரு வகையாகும் .இவ் வெளியீட்டு சாதனங்கள் கணனி முறைமையில்
செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட தகவல்களை பயனர் பார்வையிடுவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு உதவுகின்றன . கணனியிலே முறைவழியாக்கப்பட்ட தரவு ,தகவல்களை வெளியே பெற்றுத்தருவன ,
  1. காட்சித்திரை (Monitor)
  2. அச்சு இயந்திரம் (Printer)
  3. வரையி (Plotter)
  4. கேட்டல் உபகரணங்கள் (Speaker-ஒலி பெருக்கி )
  5. ஏறியி(Projector) 

Monitor

     
கணனியில் நடைப்பெறும் விடயங்களை பயனாளர்களுக்கு தெரிவிப்பது இதுவாகும்.இவை பின்வருமாறு பாகுபடுத்தப்படலாம் .
  1. CRT -கதோட்டுக் கதிர்க் குழாய்க் கணணித் திரை 
  2. LCD-திரவப்பளிங்குக் காட்சிக் கணணித் திரை 
  3. LED-ஒளிகாலும் இருவாயி கணணித் திரை    

காட்சித் திரையின்  இயல்புகள் 

        Monitor ஒன்றை கொள்வனவு செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் .

  1. Brand உதாரணம் ==> ACER , DELL , HP , Samsung
  2. Size ==> தற்போது சந்தைகளிலே 17,15,19 inch களில் இருந்து Monitor அளவுகள் காணப்படுகின்றன .
  3. Resolution( பிரிவலு)==>கணனியிலே திரையில் காண்பிக்கப்படும் காட்சியானது புள்ளிகளால் தீர்மானிக்கப்படும் இப்புள்ளிகள் Pixel எனப்படும்.Resolution என்பது 2சதுர inch பரப்புகள் உள்ளடக்கப்படும் Pixel களின் எண்ணிக்கையை நிரை ,நிரல் சார்பாக குறிப்பிடுவதாகும் .
  4. Aspect Radio==>காட்சி  திரையின் அகலம்,உயரத்துக்கு இடையிலான விகிதம் Aspect Radio எனப்படும்.பொதுவாக 4:3,16:9 ஆகிய Aspect Radioகள் காணப்படும் Monitor இல் 16:9 Wide screen aspect Radio ஆகும் .
  5. Refreshing rate==> CRT திரையில் காணப்படும் படங்களின் நிலை உடனுக்குடன் Update செய்யப்படும் .அதாவது முன்னய Picture அளிக்கப்பட்டு எடுத்த Pictureகளுக்கு இடமளிக்க வேண்டும்.72Hz என்பது 15ல் நிலைக்குத்தாக 72 தடவைகள் நிரை Refresh செய்யப்படுவதை குறிக்கும் .   

CRT -கதோட்டுக் கதிர்க் குழாய்க் கணணித் திரை  

CRT ன் நன்மைகள்

  • High Resolution and Aspect Radio  
  • Black level and contrast
  • color and gray scale Accuracy
  • படங்களின் அளவு துள்ளியமாதல்
  • விலை குறைவு    
CRT ன் தீமைகள்        
  • குறைந்த தெளிவு .
  • பிரகாசமான சூழலுக்கு பொருத்தமற்றது  .
  • வெப்பம்,மின்காந்தம்,கதிர்ப்பு ஆகியவற்றை வெளியேற்றும்.
  • அளவில் பெரியதாகையால் இடத்தை அடைக்கும் .

LCD-திரவப்பளிங்குக் காட்சிக் கணணித் திரை

LCD ன் நன்மைகள்
  • பாரம் குறைந்தது ,அடக்கமானது .
  • CRT யுடன் ஒப்பிடும் போது குறைந்த மின்வலுவை பயன்படுத்தும்.
  • குறைந்தளவு வெப்பம் வெளியிடல்.
  • மெல்லியது .
LCD ன் தீமைகள் 
  • பார்வை கோணம் குறைந்தது

LED-ஒளிகாலும் இருவாயி கணணித் திரை


LCD யுடன் ஒப்பிடுகையில் LED ன் நன்மைகள்
  • குறைந்தளவு மின் பாவனை 
  • மின்னோட்டத்துக்கு ஏற்ப இருவாயிகள் நேரடியாக ஒளியை கால்வதனால் குறைந்த  Response time 
  • பார்வை கோணம் அதிகம் .புவியீர்ப்பு விசையின் தாக்கம் இல்லாததால் விரும்பிய உயரங்களில் காட்சி திரையை அமைக்கலாம்.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக